UAE Tamil Web

அமீரகத்தில் போலி தங்கம் விற்பனை.. 12 பேரை கைது செய்த ஷார்ஜா காவல்துறை!

ஷார்ஜாவில் போலித் தங்கத் துண்டுகளை விற்பனை செய்த 12 பேர் கொண்ட கும்பலை காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

போலி தங்கத்தை வாங்கி ஏமாற்றமடைந்த மக்களிடமிருந்து பல புகார்களைப் பெற்ற காவல்துறை விசாரணையைத் தொடங்கினர்.

ஷார்ஜா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் கர்னல் உமர் அகமது அபு அல்-ஸூத் கூறுகையில், “ஆசிய நாட்டைச் சேர்ந்த கும்பல்கள் போலித் தங்கத்தை பொதுமக்கள் மத்தியில் விற்பனை செய்து ஏமாற்றி வருவதாக அதிகாரிகளுக்குப் பல புகார்கள் கிடைத்தன.

இந்த கும்பல் போலி தங்கத்தை அசல் தங்கம் என்று மக்களிடம் கூறாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். பின்னர் வாங்கப்பட்ட தங்கத்தை ஆராய்ந்த பிறகுதான் அது போலியான தங்கம் என்று தெரியவந்தது” என்றார்.

இதனையடுத்து மக்களிடமிருந்து பல புகார்களைப் பெற்ற காவல்துறை விசாரணையைத் தொடங்கி குற்றப் புலனாய்வுத் துறையின் மூலம் குற்றவாளிகளை கைது செய்தது.

மேலும் விசாரணையில், போலிப் பொருட்களை விற்பனை செய்தல், பேச்சுவார்த்தை நடத்தி முடித்தல் ஆகிய குற்றங்களை செய்ததாக அந்த கும்பல் ஒப்புக்கொண்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap