UAE Tamil Web

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த இளைஞர் – விருது வழங்கி கவுரவித்த அமீரக காவல்துறை..!

sharjah poilce

ஷார்ஜாவில் குடியிருப்பாளர் ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனைப் பிடிப்பதில் காவல்துறைக்கு உதவிய இளைஞருக்கு விருது வழங்கி ஷார்ஜா காவல்துறை கவுரவித்திருக்கிறது.

ஆசியாவைச் சேர்ந்த அந்த இளைஞரின் வீரச் செயலைப் பாராட்டி ஷார்ஜா காவல்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஸாரி அல் ஷம்சி அவர்கள் இவ்விருதினை வழங்கியிருக்கிறார்.

விருதினால் பெரிதும் உணர்ச்சிவசப்பட்ட அந்த இளைஞர், இது தனது கடமை எனத் தெரிவித்தார்.

சமூக பாதுகாப்பு மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாய் விளங்குபவர்களுக்கு எதிரான காவல்துறையின் போராட்டத்தில் பங்கெடுப்பது ஒவ்வொரு அமீரக குடியிருப்பாளரின் கடமையாகும் என ஷம்சி தெரிவித்தார்.

கொள்ளையனைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.

sharjah poilce
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap