UAE Tamil Web

ஷார்ஜா: கோவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க ட்ரோன்..

trone

கோவிட்-19 பரவலை எதிர்த்துப் போராட ட்ரோன்களை பயன்படுத்தி ஷார்ஜா காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை இன்று நண்பகல் முதல் துவக்கியுள்ளது.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும், மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பேணவும் ஷார்ஜாவின் அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை குழு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

உள்துறை அமைச்சகத்தின் பொது பாதுகாப்பு இயக்குநரக ஏர் விங் துறை ஒத்துழைப்புடன் சமூக உறுப்பினர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரமாக இது துவக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போலீஸ் ரோந்து மற்றும் ட்ரோன்கள் மூலம் நேரடியாக விழிப்புணர்வு செய்திகள் ஒலிபரப்பப்படுகிறது. கூடுதலாக, கோவிட்-19 தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு சமூக மக்கள் இணங்குவதை கண்காணிக்க விமான ரோந்துகளும் மேற்கொள்ளப்படும்.

போலீஸ் ரோந்து வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் பல மொழிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு செய்திகளை ஒலிபரப்பின.இந்த செய்திகள் தொழில்துறை மண்டலங்கள் மற்றும் மசூதிகள் உள்ள பகுதிகள் என 35 இடங்களில் இன்று ஒலிபரப்பப்பட்டது.

தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எந்த அளவிற்கு தவறாமல் கடைபிடிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க ஏர் விங் நிர்வாகம் விமான ரோந்து மூலம் வான்வழி புகைப்படங்களையும் எடுத்தது.

trone
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap