39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ஷார்ஜாவில் மீண்டும் திறக்கப்படும் பிரபல பொழுதுபோக்கு இடங்கள்!

Wam

ஷார்ஜா முதலீட்டு மற்றும் வளர்ச்சித் துறை (Shurooq) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷார்ஜாவின் பிரபல பொழுதுபோக்கு மற்றும் தங்கும் விடுதிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாகவும், எமிரேட் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கப் பணிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத துவக்கத்தில் ஷார்ஜாவின் வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அல் காஸ்பா (Al Qasba), அல் மஜாஸ் வாட்டர் ஃப்ரன்ட் (Al Majaz Waterfront), அல் நூர் தீவு (Al Noor Island), தி ஃபிளாக் தீவு (The Flag Island), ஹார்ட் ஆஃப் ஷார்ஜா (Heart of Sharjah), மிலேய்ஹா தொல்பொருள் மற்றும் இயற்கைசார் சுற்றுலா  (Mleiha Archaeological & Ecotourism Project), கோர் ஃபக்கான் கடற்கரை (Khor Fakkan Beach), மரயா கலை மையம் மற்றும் 1971 டிசைன் ஸ்பேஸ் (Maraya Art Centre and 1971-Design Space) ஆகியவை மீண்டும் திறக்கப்படுகின்றன.

The Chedi Al Bait, Al Badayer Retreat, Al Faya Retreat மற்றும் Kingfisher Retreat ஆகிய சொகுசு விடுதிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகை தரும் விருந்தினர்கள் அமீரக அரசு வகுத்திருக்கும் பாதுகாப்பு குறித்த கட்டுப்பாடுகளான முகக்கவச பயன்பாடு மற்றும் 2 மீட்டர் இடைவெளியுடன் சமூக விலகலை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகை தரும் பிரயாணிகளுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு சுகாதார மையங்கள் தவிர மற்ற பகுதிகளுக்குள் செல்ல அனுமதியில்லை. உணவகங்கள் 30 சதவிகித பணியாளர்களுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கத்திகளுடன் இயங்க வேண்டும்.

இதுகுறித்து ஷார்ஜா முதலீட்டு மற்றும் வளர்ச்சித் துறையின் செயலாக்கத்துறை பிரிவின் மூத்த அதிகாரியான அகமது ஒபைத் அல் கசீர் (Ahmed Obaid Al Qaseer) பேசுகையில்,” சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களை மீண்டும் திறக்க இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியார்களின் பாதுகாப்பிறகு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றார்.

மேலும், சுகாதாரமான சூழலை அமைக்க அரசு விதித்திருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுவோம் எனவும், விருந்தினர்கள் பாதுகாப்பான மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக தங்களது நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும் எனவும் கசீர் தெரிவித்தார்.

விருந்தினர்கள் அரசு வகுத்திருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளின் வாயிலாக தங்களது மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதை கடமையாகக்கொள்ள வேண்டும். விருந்தினர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம்” என கசீர் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!