UAE Tamil Web

ஷார்ஜா: மலையிலிருந்த கீழே விழுந்தவரை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றிய மீட்பு குழு

ஷார்ஜாவில் உள்ள மலைப்பகுதியில் சிக்கிக்கொண்ட லெபனான் நாட்டைச் சேர்ந்தவரை, தேடுதல் மற்றும் மீட்புக்கான தேசிய மையம் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

வாடி அல் ஹிலுவின் மலைப் பகுதியில் விழுந்து காலில் பலத்த காயம் அடைந்ததாக கல்பா காவவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த, தேடுதல் மற்றும் மீட்புக்கான தேசிய மையக் குழு, அந்த நபரைக் கண்டறிய ஹெலிகாப்டரை அனுப்பி தேடுதலில் ஈடுபட்டது.

காயமடைந்த லெபனானியரை  வெற்றிகரமாக கண்டறிந்து மீட்ட மீட்புக் குழு, தேவையான சிகிச்சைக்காக ஷார்ஜாவின் கல்பா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

0 Shares
Share via
Copy link