39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

108 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்ட ஷார்ஜா ஆட்சியாளர்!

sharjah ruler

உச்ச சபையின் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி (Dr. Sheikh Sultan bin Muhammad Al Qasimi) ஈத் அல் பித்ர் திருநாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் அந்த எமிரேட்டில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

حاكم الشارقة يعفو عن (108) نزيل بالمؤسسة العقابية والإصلاحية بالشارقة أمر صاحب السمو الشيخ الدكتور سلطان بن محمد القاسمي عضو المجلس الأعلى حاكم الشارقة، بالإفراج عن (108) نزيلاً، من الذين يقضون فترة محكوميتهم بإدارة المؤسسة العقابية والإصلاحية بالشارقة، وانطبقت عليهم شروط العفو، وثبتت أهليتهم للتمتع بالعفو وفق شروط حسن السيرة، والسلوك، وذلك بمناسبة حلول عيد الفطر المبارك. وبهذه المناسبة رفع سعادة اللواء سيف الزري الشامسي قائد عام شرطة الشارقة، أسمى آيات الشكر والتقدير إلى صاحب السمو حاكم الشارقة، على مكرمة سموه بالعفو عن المحكومين، والتي تأتي انطلاقاً من حرص سموه على دعم كيان الأسرة، والمحافظة على استقرارها، وإدخال البهجة والسرور إلى نفوس أسر المحكومين وعائلاتهم وأبنائهم في هذه الأيام المباركة، آملاً أن تكون هذه المكرمة باعثاً للخير في نفوس المفرج عنهم، وسبيلاً إلى الاستفادة من دروس تجربتهم، والعودة إلى المجتمع أفراداً صالحين يسهمون في تعزيز أمنه واستقراره، والمشاركة في مسيرة نهضته الشاملة التي تتبناها قيادتنا الرشيدة.

A post shared by شرطة الشارقة (@shjpolice) on

ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதியான மேஜர் ஜெனரல் சயஃப் அல் ஸாரி அல் ஷம்சி (Saif Al Zari Al Shamsi) இதுகுறித்துப் பேசுகையில்,” ஆட்சியாளரின் இந்த மனிதாபிமான அடிப்படையிலான முடிவிற்கு நன்றி. ஆட்சியாளரின் இந்த அறிவிப்பினால் கைதிகள் மனந்திருந்தி நல்ல குடிமகனாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,

“கைதிகளின் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் துவங்கவும், அவர்களுடைய குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகவும், சமூகத்துடன் மீண்டும் ஒன்றி வாழவும் ஆட்சியாளரின் இந்த மன்னிப்பு நடவடிக்கை வழிவகுக்கும்” என்றார்.

இதையும் படிங்க.!