37.7 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

தீ விபத்திற்குள்ளான கட்டிட குடியிருப்பாளர்களுக்கு உதவிய ஷார்ஜா ஆட்சியாளர்..! நன்கொடை கேட்கும் மோசடியாளர்களை நம்ப வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை..!

abbco

ஷார்ஜாவில், அல் நஹ்தா பகுதியில் உள்ள அப்கோ கட்டிடத்தில் (Abbco Tower) கடந்த செவ்வாய்க்கிழமையன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உச்ச கவுன்சில் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் கஸமி அவர்கள், அங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தேவையான தற்காலிக குடியிருப்பு வசதிகளை வழங்குமாறு, ஷார்ஜா அறக்கட்டளை சங்கத்திற்கு (Sharjah Charity Association) அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தீயினால் பாதிக்கப்பட்ட கட்டிடம் (tower) மீண்டும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறும் வரை அவர்களுக்கு மாற்று இட வசதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை (நேற்று) பிற்பகல், கட்டிடத்தில் வசிப்பவர்கள் சார்பாக உதவி கோரி சமூக வலைதளத்தின் மூலம் போலியாக பரப்பப்படும் செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று ஷார்ஜா காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஏனெனில் வியாழக்கிழமை இரவு, ஐக்கிய அரபு அமீரக மக்களிடம், இத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடைகளை கேட்டு வாட்ஸ்அப்பில் செய்தி ஒன்று பரவியது. அதில் இரண்டு மொபைல் எண்கள் தொடர்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஆண்களுக்கானது மற்றொன்று பெண்களுக்கானது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை கண்காணிப்பதற்காக காவல்துறையினரால் அதிகாரப்பூர்வ குழு அமைக்கப்பட்டிருந்தாலும், கட்டிடத்தின் குடியிருப்பாளர்கள் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடமிருந்து தேவையான அக்கறையுடன் கூடிய கவனிப்பு மற்றும் பாதுகாப்பை பெறுகின்றனர் என்று ஷார்ஜா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், எந்தவொரு உதவி மற்றும் நன்கொடைகளும் இதற்கு சம்மந்தப்பட்ட ஷார்ஜா அறக்கட்டளை சங்கம்(Sharjah Charity Association) அல்லது எமிரேட்ஸ் ரெட் கிரசெண்டிற்கு (Emirates Red Crescent) மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதையும் ஷார்ஜா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Source: Gulf News

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!