UAE Tamil Web

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை – ஷார்ஜா பள்ளிக்கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கோடை விடுமுறை முடிந்து ஷார்ஜாவில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இம்மாத இறுதியில் தொடங்குகின்றன. கொரோனா பரவல் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • பள்ளி செல்லும் அனைத்து ஆசிரியர்கள் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் முதல்நாள் அன்று கொரோனா நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்
  • பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத பட்சத்தில் அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
  • கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் வாரந்தோறும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
  • புதிதாக வெளிநாடுகளில் இருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 2 மாதங்களுக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
  • பள்ளி செல்லும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை.
1 Share
Share via
Copy link