வரும் ஜனவரி 8, சனிக்கிழமையன்று கோர் ஃபக்கான் (Khorfakkan) சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடுவதாக ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது.
ஷார்ஜா அரசின் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது, “கோர் ஃபக்கான் சாலைக்கு செல்லும் சுரங்கப்பாதை வரும் ஜனவரி 8, சனிக்கிழமையன்று பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படும். ஆகையால் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வேகமாக செல்வதை தவிர்த்து, சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.