39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ஷார்ஜா : மீண்டும் திறக்கப்படும் திரையரங்கங்கள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள்!

SHARJAH

ஷார்ஜாவில் உள்ள திரையரங்கங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகிய பொது இடங்கள் வரும் ஜூன் 24 ஆம் தேதி முதல் 50 சதவிகித வாடிக்கையாளர்களோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவின் துணை ஆட்சியாளரும், ஷார்ஜா நிர்வாகக்குழுவின் தலைவரும், ஷார்ஜாவின் மகுட இளவரசருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சுல்தான் பின் முகமது பின் சுல்தான் அல் காசிமி (Sheikh Sultan Bin Mohammed Bin Sultan Al Qasimi) அவர்களுடைய வழிகாட்டுதலின்படி போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் பொது இடங்களை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா காவல்துறையின் தலைமை கமாண்டரான மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஸாரி அல் ஷம்சி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அவசரநிலை மற்றும் நெருக்கடி மேலாண்மை கூட்டத்தில், இந்த பொது இடங்களின் மறு திறப்பு குறித்து பல்வேறு அரசுத் துறைத் தலைவர்களுடன் கலந்துரையாடினார் மேஜர் ஜெனரல் ஷம்சி. பொது இடங்களை மீண்டும் திறக்கையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இம்மாத துவக்கத்தில் ஷார்ஜாவில் உள்ள மால்கள், உணவகங்கள் மற்றும் அழகு நிலையங்களை 30 சதவிகித வாடிக்கையாளர்களோடு திறக்கலாம் என அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!