UAE Tamil Web

ஷார்ஜா குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..! துரிதமாக செயலாற்றிய காவல்துறை..!

fire

ஷார்ஜாவின் தாவூன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர்.

- Advertisment -

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கட்டிடத்தின் சமையலறை பகுதியில் தீப்பற்றியுள்ளது என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் தீ விபத்துக்கான உண்மையான காரணம் சரிவர தெரியவில்லை.

சிறிய சிறிய அறைகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் இந்த கட்டிடத்தில் 12க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வசித்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, இது போன்ற கட்டிட அமைப்பில் அளவுக்கு அதிகமானோர் வசிப்பதன் காரணமாக இது மாதிரியான தீ விபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் குடியிருப்பாளர்களின் உயிருக்கு இது மிகப்பெறும் அச்சுறுத்தலாக இருக்க நேரிடும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

குடியிருப்பாளர்கள் குடியிருப்பு பற்றிய விதிமுறைகளை சரிவர பின்பற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இச்சம்பவம் குறித்து காலை 7:30 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் 5 நிமிடத்தில் சிவில் பாதுகாப்புக்குழு அந்த இடத்திற்கு விரைந்தனர். 10 நிமிடத்தில் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் விரைவான மற்றும் சாமர்த்தியமான செயலினால் மற்ற கட்டிடத்திற்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.