UAE Tamil Web

ஷார்ஜா: கீழே விழுந்த 2 வயது சிறுமி – நீல நிறத்தில் மாறிய முகம் – 4 நிமிடத்தில் விரைந்துவந்த மருத்துவ குழு..!

Ambulance_

ஷார்ஜாவில் கட்டிலில் படுத்திருந்த 2 வயதுக் குழந்தை கீழே தடுமாறி விழுந்திருக்கிறது. குழந்தையின் தலையின் பின்புறம் அடிபட்டதால் தற்காலிகமாக நினைவை இழந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் முகம் நீல நிறத்தில் மாறியிருக்கிறது.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற குழந்தையின் பெற்றோர், தேசிய ஆம்புலன்ஸ் சேவைக்கு 998 என்ற எண்ணிற்கு அழைத்து விபரத்தைத் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து 4 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் குழந்தையின் வீட்டிற்கு வந்திருக்கிறது.

முதலுதவி அளித்த பின்னர், குழந்தையின் நிலைமை சீராகும் வரை அதன் அருகிலேயே மருத்துவக் குழு இருந்திருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையின் நினைவு திரும்பியதாலும், முகம் இயல்பு நிலைக்கு வந்ததாலும் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.

ஒருவேளை குழந்தைக்கு மீண்டும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனேயே அழைக்கவும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பெற்றோர்கள் குழந்தைகளின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது நலம். இதன்மூலம் கீழே விழுதல், ஆபத்தானவற்றை உட்கொள்ளுதல், தீவிபத்து போன்ற அடிக்கடி நிகழும் ஆபத்திலிருந்து குழந்தைகளைக் காக்கலாம். பொதுவாக, மேற்பார்வை இல்லாததன் காரணமாகவே குழந்தைகளுக்கு வீட்டில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

Ambulance_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap