UAE Tamil Web

ஷார்ஜாவில் தனது அறையில் தூக்குப்போட்டுக்கொண்ட 27 வயது இந்திய இளைஞர் – ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இரு இந்தியர்கள்..!

suicide

ஷார்ஜாவின் அல் ஹம்ரியா பகுதியில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அவசர உதவி வேண்டி போன் கால் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த 27 வயது இந்தியர் தனது அறையில் தூக்குப்போட்டுக்கொண்டதாக அதே கட்டிடத்தில் வசிக்கும் அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisment -

சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றப்புலனாய்வு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில் இது தற்கொலைதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கட்ட விசாரணைகளுக்காக இளைஞரின் உடல் அல் காசிமி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.

இந்த மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது இந்தியர் இவராவார். சென்றவாரம் 21 வயது இந்திய இளைஞர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். 

அமீரகத்தில் தற்கொலை செய்துகொள்ளும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது அமீரகவாழ் இந்திய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.