ஷார்ஜாவின் அல் தாவூன் மேம்பாலத்தில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் 43 வயது ஆப்பிரிக்கப் பெண்மணி உயிரிழந்திருக்கிறார்.
நேற்று மாலை 4.50 மணிக்கு மேம்பாலத்தின்மீது சென்றுகொண்டிருந்த பெண்ணின் மீது அதிவேகத்தில் சென்ற கார் மோதியிருக்கிறது. இதனால் படுகாயமைடைந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறை, ரோந்துப் படை மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் குழுவை சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பியது.
இருப்பினும் விபத்தில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக பெண்மணி மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே மரணமடைந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. வாகனத்தினை வேகமாக இயக்கிய அரபு ஆண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விபத்து குறித்து அல் புஹைரா காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பொதுமக்கள் கவனமாக சாலைகளை கையாளுமாறும், விதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சாலைகளை கடக்கவேண்டும் எனவும் ஷார்ஜா காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அதேபோல, வாகனவோட்டிகள் சாலை விதிமுறைகளுக்கு உட்பட்டும் வேகக் கட்டுப்பாட்டை உணர்ந்து செயல்படுமாறும் காவல்துறை எச்சரித்திருக்கிறது.