UAE Tamil Web

பீச்களில் தங்குமிடமாகவும், கிச்சனாகவும் பயன்படுத்தப்பட்ட 213-க்கும் மேற்பட்ட படகுகள்.! நடவடிக்கை எடுத்த ஷார்ஜா நகராட்சி

boats

நடப்பாண்டில் மட்டும் நகரின் கடற்கரைகளில் இருந்து 213-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை 20,000-க்கும் மேற்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது ஷார்ஜா நகராட்சி பறிமுதல் செய்துள்ளது.

- Advertisment -

ஷார்ஜா நகராட்சி வாடிக்கையாளர் சேவைத் துறை உதவி பொது மேலாளர் காலித் பின் ஃபலாஹ் அல்-சுவைதி கூறுகையில், அழகிய பொது இடங்களை சிதிலமடையாமல் பராமரிப்பதற்கும், விதிகளை மீறுபவர்கள் மீது பொறுப்பற்ற செயல்களுக்காக வழக்கு தொடரவும் இந்த ஆண்டு முழுவதும் குடிமை அமைப்பு ஒரு தொடர்ச்சியான ஆய்வுகளை நடத்தியது.

நகரின் அழகை குறிப்பாக கடற்கரைகளை மேலும் மேம்படுத்த நகராட்சி உறுதியாக உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 20,000-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 213-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட படகுகள் மற்றும் இழுவைப் படகுகள், மீன்பிடி கருவிகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தோம்.உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்த பின்னர் இந்தபறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

ஷார்ஜா நகராட்சி நகர துப்புரவு கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் ஜமால் அப்துல்லா அல் மஸ்மி கூறுகையில், நகரின் பல்வேறு கடற்கரைகளில் காணப்பட்ட படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் தங்குமிடம் அல்லது மீன்பிடி உபகரணங்களின் கிடங்குகளாகப் பயன்படுத்தப்பட்டன.

அவற்றிலும் சில தற்காலிக சமையலறைகளாக மாற்றப்பட்டன. சேதமடைந்த மற்றும் கைவிடப்பட்ட இழுவை படகுகள் ஷார்ஜாவின் கலாச்சார தோற்றத்தை சிதைப்பதற்கு எதிரான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்க விரும்பும் உரிமையாளர்கள், முதலில் அபராதம் செலுத்த வேண்டும்.பின் நகராட்சி கட்டுப்பாடு மற்றும் ஆய்வுத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.