UAE Tamil Web

ஷார்ஜா: அனைத்து நர்சரிகளையும் திறக்க அரசு அனுமதி..!

BC-Back-to-school-mental-health_

கொரோனா பாதுகாப்பு ஆய்வுகள் முடிவடைந்த பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் ஷார்ஜாவில் உள்ள அனைத்து நர்சரிகளையும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

- Advertisment -

ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் ஆகியவை இணைந்து ஷார்ஜா முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் நர்சரிகள் வகுப்பறைகளில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருப்பதாக ஷார்ஜா ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷார்ஜாவில் 39 அரசால் நடத்தப்படும் நர்சரிகளும் 35 தனியார் நர்சரிகளும் இயங்கிவருகின்றன.

கொரோனா காரணமாக நர்சரி முதல் பள்ளிகள் வரையில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. ஷார்ஜா தனியார் கல்வி ஆணையத்தின் தலைவர் டாக்டர்.முஹத்திதா அல் ஹாஷிமி இதுகுறித்துப் பேசுகையில்,”நர்சரிகள் பாதுகாப்பு விதிமுறைகளை கவனமாக பின்பற்றியிருக்கின்றனவா? என்பதை அறிந்த பின்னரே அவற்றைத் திறக்க அனுமதி அளிக்கப்படும்” என்றார்.

நர்சரிகளில் பணிபுரியும் நபர்கள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கின்றனரா? நர்சரிகளில் மதிய உணவு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதா? பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு மதிய உணவினை அளிக்கிறார்களா? நர்சரிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சுத்திகரிப்பு செய்யப்படுகின்றனவா? போன்ற ஆய்வுகளை ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது.