UAE Tamil Web

ஷார்ஜா: அல் காதிசியா பகுதியில் இருந்து பேச்சுலர்களை அப்புறப்படுத்தும் பணி துவக்கம் – வீடியோ..!

sharjah,-uae,-bachelors,-expats,-crackdown,-accomodations

ஷார்ஜாவில் உள்ள அல் காதிசியா பகுதியில் வசிக்கும் ஏமிராட்டி பெண் ஒருவர்,””எனக்கு வெளியே செல்லவே அச்சமாக இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கே பாதுகாப்பில்லாமல் உணர்கிறார்கள். ஆண்கள் (பேச்சுலர்கள்) மற்றும் தொழிலாளர்கள் கூட்டமாக எனது வீட்டருகே நிற்கிறார்கள். மேலும், அவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்கிறார்கள்” என ரேடியோ நேரலை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஷார்ஜாவின் ஆட்சியாளரும் உச்ச சபையின் உறுப்பினருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி (Sheikh Sultan Bin Mohammed Al Qasimi)  அவர்கள் அல் காதிசியா பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்களை உடனடியாக வெளியேற்றும்படி ஷார்ஜா நகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்

இந்நிலையில் அல் காதிசியாவில் குடும்பங்கள் வசிக்க அனுமதியளிக்கப்பட்டிருந்த 60  குடியிருப்பு வளாகங்களில் தங்கியிருந்த பேச்சுலர்கள் இன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஆட்சியாளரின் வழிகாட்டுதல் மற்றும் ஷார்ஜா மின்சார, நீர் மற்றும் எரிவாயு ஆணையம் (SEWGA) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்த வெளியேற்றும் பணியை ஆய்வு செய்யும் குழுவின் தலைவரும் ஷார்ஜா நகராட்சியின் தலைமை இயக்குனருமான தபிட் சலீம் அல் தாரிஃபி (Thabit Salem Al Tarifi), ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் சாரி அல் ஷம்சி (Saif Al Zari Al Shamsi), SEWGA அதிகாரிகள் ஆகியோர் இந்த வெளியேற்றுதல் பணியை பார்வையிட்டார்கள்.

குடியிருப்பு வளாகங்களில் ஒருங்கிணைந்த அமைப்புகளை உருவாக்கவும், சட்ட விரோதமாக தடுப்புகள் மற்றும் உட்பிரிவுகள் இருக்கின்றனவா? என்பதனை நகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

قام سعادة اللواء سيف الزري الشامسي قائد عام شرطة الشارقة، بزيارة ميدانية لمنطقة القادسية، والوقوف على الإجراءات التي باشرتها شرطة الشارقة منذ يوم أمس، تنفيذاً لتوجيهات صاحب السمو حاكم الشارقة، وتحقيق التعاون المشترك مع جهات الاختصاص ببلدية مدينة الشارقة وهيئة كهرباء ومياه وغاز الشارقة، بما يضمن توحيد الجهود لإخلاء المنطقة من المخالفين والحفاظ على راحة وسلامة وأمن القاطنين في تلك المنطقة من الأسر والعائلات. @shjmunicipality @sewa_sharjah #شرطة_الشارقة #shjpolice

A post shared by شرطة الشارقة (@shjpolice) on

“வீட்டு உரிமையாளர்கள் மற்றும் நேரடி குத்தகைதாரர்களுக்கு, சட்ட விதிகளுக்குப் புறம்பாக வீட்டு வாடகைகளை ஒப்பந்தம் செய்தல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என தாரிஃபி தெரிவித்தார்.

இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் வசிக்கும் பேச்சுலர்களை வெளியேற்றும் வரையில் இந்நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

“تنفيذاً لتوجيهات حاكم الشارقة” “بلدية الشارقة تباشر التنفيذ الفوري بإخلاء منطقة القادسية من العزّاب والعمّال بالتعاون مع القيادة العامة للشرطة وهيئة كهرباء ومياه وغاز الشارقة”. تنفيذاً لتوجيهات صاحب السمو الشيخ الدكتور سلطان بن محمد القاسمي عضو المجلس الأعلى حاكم الشارقة بإخلاء منطقة القادسية من العزّاب والعمّال والمخالفين الذين يقيمون في مناطق مخصصة للعائلات، باشرت بلدية مدينة الشارقة بالتعاون مع القيادة العامة لشرطة الشارقة وهيئة كهرباء ومياه وغاز الشارقة بإشعار القاطنين من العمال والعزاب بإخلاء المنطقة فوراً. وقامت البلدية صباح اليوم بحضور ثابت الطريفي مديرها العام واللواء سيف الزري الشامسي القائد العام لشرطة الشارقة وممثلين عن هيئة كهرباء ومياه وغاز الشارقة، ومساعدي مدير عام البلدية ولفيف من المسؤولين، بجولة في منطقة القادسية للوقوف على سير أعمال الإخلاء والاستماع لملاحظات السيدة صاحبة الملاحظة في برنامج الخط المباشر حول وجود عمّال يقيمون في المنطقة وهي غير مخصصة لهم، والالتقاء بمجموعة من العائلات القاطنة في ذات المنطقة للاستماع لملاحظاتها واستفساراتها. وشكلت البلدية فرق عمل، لعمل مسح كامل للمنطقة وحصر أعداد المساكن المخالفة والتي يقطنها عمّال وعزّاب، حيث أشعرت أكثر من 60 مسكناً بضرورة الإخلاء الفوري خلال مدة محددة وقصيرة، كما قامت بالتعاون مع هيئة كهرباء ومياه وغاز الشارقة بقطع الخدمات عن المساكن التي يوجد بها تجاوزات من قبل قاطنيها، مشيراً إلى أن الحملة مستمرة لغاية الانتهاء من إخلاء المنطقة بالكامل ممن لا يسمح لهم السكن بها. . . In implementation of the directives of H.H. Sheikh Dr. Sultan bin Muhammad Al Qasimi, Supreme Council Member and Ruler of Sharjah, Sharjah City Municipality, in cooperation with Sharjah Police and Sharjah Electricity, Water and Gas Authority, has begun to notify bachelor residents to evacuate their houses in Al Qadisiya area which is designated for families only. The municipality formed teams to conduct a complete survey of the area and count the number of violating housing units inhabited by bachelors. More than 60 houses were notified for evacuation within a short specific period. #الشارقة #بلدية_مدينة_الشارقة #sharjah #shjmunicipality @shjpolice @sewa_sharjah

A post shared by بلدية مدينة الشارقة (@shjmunicipality) onerror: Alert: Content is protected !!