ஷார்ஜா கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர் மற்றும் நிர்வாக ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பணியை எளிமையாக்கும் நோக்கில் கல்வித்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து புதிய 7 கொரோனா தடுப்பூசி மையங்களைத் திறந்துள்ளது.
ஷார்ஜாவின் கிழக்கு மற்றும் மையப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த கொரோனா தடுப்பூசி மையங்களின் பட்டியலைக் கீழே காணலாம்.
- அல் சாஜா மால் (Al Saaja Mall)
- முவாலிஹ் புறநகர் கவுன்சில் (Muwalih Suburb Council)
- எக்ஸ்போ சென்டர் ஷார்ஜா (Expo Centre Sharjah)
- முகைதிர் புறநகர் கவுன்சில் (Mughaidir Suburb Council)
- ஷார்ஜா ஹால் பல்கலைக்கழகம் (கல்பா கிளை) (University of Sharjah Hall (Kalba Branch)
- ஹூயாவா புறநகர் கவுன்சில் (Huyawa Suburb Council)
- அல் புஸ்தான் புறநகர் கவுன்சில் (Al Bustan Suburb Council)
In partnership with the Ministry of Health and Community Protection, the following centres have been sanctioned to provide COVID-19 vaccinations for all members of the administrative and teaching staff as well as all employees of the Ministry of Education. pic.twitter.com/4X9Ztn98RN
— وزارة التربية (@MOEducationUAE) March 12, 2021
சமூக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.