UAE Tamil Web

ஷார்ஜா: தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் – கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு விலக்கு..!

Dubai schools

ஷார்ஜா: தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் தங்களது சொந்த செலவில் கொரோனா PCR பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் (SPEA) அறிவித்துள்ளது.

- Advertisment -

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது மருத்துவ காரணங்களால் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாது என சான்றிதழ் பெற்ற தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்  கண்டிப்பாக 14 நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனை செய்து முடிவுகளை பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கவேண்டும்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், SPEA அலுவலகத்திற்கு வருகைதரும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது வருகைக்கு முன்னதான 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள் இந்த விதிமுறையைப் பின்பற்றத் தேவையில்லை.

`மேலும், ஷார்ஜாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் தமாம் (Tamam) தளத்தில் தங்களுடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் எத்தனைபேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட PCR பரிசோதனைகளின் முடிவுகள் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு SPEA ன் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வின்போது நிறுவனங்களுக்கு வருகை தந்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும் என  SPEA வின் கண்காணிப்பு குழு அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.