UAE Tamil Web

பராக் பார்த்துக்கொண்டே வாகனத்தை ஓட்டியவர்களால் 83 விபத்துகள் நடைபெற்றுள்ளன: ஷார்ஜா காவல்துறை..!

Bus-trailer-accident

ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறை “உங்களது கவனத்தை சாலையில் இருந்து அகற்றாதீர்கள்” எனப் பொருள்படும் ‘Don’t lose your focus on the road’ என்ற ஆன்லைன் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.

- Advertisment -

ஷார்ஜா காவல்துறையின் தரவுகளின்படி, வேடிக்கை பார்த்துக்கொண்டே வாகனத்தை இயக்கியதால் கடந்த ஆண்டு மட்டும் 83 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த விபத்தினால் பலர் படுகாயம் அடைந்ததோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய வெளிப்புற சாலைகள் மற்றும் ரோந்துத் துறையின் இயக்குனர் கேப்டன் ஃபஹத் அல் பலோஷி,”அமீரக ஆட்சியாளரின் வழிகாட்டுதலின்படியும், மத்திய உட்கட்டமைப்புத்துறையின் நோக்கத்தின் மூலமாகவும் வாகன விபத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆன்லைன் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த பிரச்சாரம் மூலமாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக செய்திகள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படும். மேலும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரானிக் பலகைகளில் அரபி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் வாகனவோட்டிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் திரையிடப்படும் என பலோஷி தெரிவித்தார்.

இந்த பிரச்சாரம் மூலமாக 25,000 பேர் பயனடைந்துள்ளதாக பலோஷி தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.