UAE Tamil Web

அதி வேகத்தில் சென்ற போது ரிப்பேரான காரின் “குரூஸ் கன்ட்ரோல்”.! உயிர் பயத்தில் பதறிய டிரைவர்..

car

அமீரகத்தில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் துபாயிலிருந்து, ஷார்ஜாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். காரில் 100 கி.மீ வேகத்தில் சென்ற போது அவரது வாகனத்தின் பயணக் கட்டுப்பாடு அமைப்பான குரூஸ் கன்ட்ரோல்(cruise control) திடீரென வேலை செய்யாமல் பழுதாகியுள்ளது.

- Advertisment -

குரூஸ் கன்ட்ரோல் என்பது நெடுஞ்சாலை பயணங்களின் போது ஒரே சீரான வேகத்தில் கார் செல்ல பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம். எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டுமோ அந்த வேகத்தை செட் செய்துவிட்டால், ஆக்ஸிலேட்டரை மிதிக்காமலேயே கார் தானாக அந்த வேகத்தில் செல்லும். காரின் வேகத்தை குறைக்க வேண்டுமானால் ஆக்ஸிலேட்டர் அல்லது பிரேக்கில் கால் வைத்து லேசாக அழுத்தினால் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ரிலீஸ் ஆகிவிடும்.

100

மேற்கண்ட வாகன ஓட்டிக்கு அவரது காரின் இந்த நவீன தொழிநுட்பம் தான் ஃபெயிலியராகியுள்ளது. வேகத்தை குறைக்க ஆக்ஸிலேட்டர் மற்றும் பிரேக்கை கால் வைத்து அழுத்தியும் காரின் வேகம் குறையவில்லை. இதனை அடுத்து அந்த வாகன ஓட்டியால் தனது வாகனத்தை மெதுவாக்கவோ அல்லது நிறுத்தவோ முடியவில்லை. காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக அந்த வாகன ஒட்டி செய்வதறியாது சிறிது நேரம் உயிர் பயத்தில் இருந்துள்ளார். பின் சுதாரித்து கொண்டு தனது இக்கட்டான நிலை குறித்து கால் செய்து ஷார்ஜா போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவித்துள்ள ஷார்ஜா காவல்துறை செயல்பாட்டு அறை இயக்குநர் கர்னல் ஜாசிம் பின் ஹத்தா அல் சுவைதி, 100 கி.மீ வேகத்தில் சென்ற காரில் இருந்தபடியே அந்த டிரைவர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து உடனடியாக ஒரு மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டது.

குறிப்பிட்ட சாலையை அடைந்த மீட்பு குழு, வேகமாக சென்று கொண்டிருந்த வாகனத்தை கடந்து முன்னால் சென்று போக்குவரத்தை சரி செய்தது. தொடர்ந்து ரோந்து அதிகாரிகள் தொலைபேசியில் அந்த வாகன ஓட்டியை தொடர்பு கொண்டு அவரை அமைதிப்படுத்தினர். பின்னர் பதறாமல் பொறுமையாக காரில் இருந்த ஹேண்ட் பிரேக்குகளை நிதானமாக பயன்படுத்தும்படி அவருக்கு அறிவுறுத்தினர்.

மீட்புக்குழுவின் அறிவுறுத்தல் படி செயல்பட்ட வாகன ஓட்டுநர், வாகனத்தை சாலையோரத்தை நோக்கி ஓட்டி சென்று இறுதியில் வாகனத்தை நிறுத்தினார். மீட்பு குழுவினரின் ஆலோசனைப்படி செயல்பட்டதால் அந்த வாகன ஓட்டுநர் பாதுகாப்பாகவும், காயமடையாமலும் இருந்தார். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய மீட்புக் குழுவினரின் உதவிக்கு நன்றி தெரிவித்து கொண்டார் என்று கூறினார்.