UAE Tamil Web

ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் தீ விபத்து – பொருட்கள் எரிந்துநாசம்..!

Fire-in-Sharjah-University2

ஷார்ஜாவின் கோர் ஃபக்கானில் உள்ள யூனிவெர்சிட்டி ஆஃப் ஷார்ஜாவின் கேரவனில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

ஷார்ஜா சிவில் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குனரான கர்னல் சமி காமிஸ் அல் நக்பி இதுகுறித்துப் பேசுகையில்,” ஷார்ஜா பல்கலைகழகத்தின் கோர் ஃபக்கான் கிளையின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு தகவல் அளிக்கப்பட்டது” என்றார்.

Fire-in-Sharjah-University_
Image Credit: Gulf News

கேரவனில் இருந்த பொருட்கள் தீக்கிரையானது. தடயவியல் நிபுணர்கள் இந்த தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றனர்.