UAE Tamil Web

வாகனவோட்டிகள் கவனத்திற்கு : வேகத்தைக் கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள 5 புதிய ரேடார்கள்..!

Sharjah road

ஷார்ஜா : ஷீஸ் பகுதியில் இருந்து கோர் ஃபக்கானுக்குச் செல்லும் சாலையில் 5 புதிய ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தைக் கண்காணிக்க நிறுவப்பட்ட இந்த ரேடார்கள் இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வருவதாக அராபிய தினசரியான அல் பயான் செய்தி வெளியிட்டுள்ளது.

- Advertisment -

கோர் ஃபக்கான் சாலையில் சமீப காலமாக வாகனவோட்டிகள் அதிவேகமாக காரை இயக்கியதால் இந்த ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறையின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் முகமது அலை அல் நக்பி இதுகுறித்துப் பேசுகையில்,”நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் வேகமாக இயக்கப்படும் வாகனங்களை இந்த ரேடார்கள் கண்டறியும் வல்லமை கொண்டவை. இந்த சாலையை உபயோகிக்க அனுமதியில்லாத ட்ரக்குகள் உள்ளிட்ட வாகனங்களையும் இந்த ரேடார்கள் கண்டறிய உதவும்” என்றார்.

ஷீஸ் – கோர் ஃபக்கான் சாலையில் 80kmph மற்றும் 100kmph என இரண்டு வேக வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நக்பி தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.