UAE Tamil Web

ஷார்ஜா: லூலூ ஹைப்பர் மார்கெட்டில் தீ விபத்து – 4 இந்தியர்கள் காயம்..!

NAT-Fire-in-electric-room-

ஷார்ஜாவின் முவேய்லி பகுதியில் அமைந்துள்ள லூலூ ஹைப்பர் மார்கெட்டில் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஷார்ஜா சிவில் பாதுகாப்பு படைக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, தீயணைப்புக்குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது.

பார்க்கிங் பகுதியில் அமைந்துள்ள எலெக்ட்ரிக் அறைக்குள் இருந்த கேபிளில் தீ பிடித்திருப்பது தெரியவரவே, வீரர்கள் உடனடியாக அதனை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக கட்டிடத்தின் மின் இணைப்பைத் துண்டித்தனர். இந்த ஹைப்பர் மார்கெட் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் அறையில் இருந்த 4 பேர் இந்த தீ விபத்தினால் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அல் காசிமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். 3 பேர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஒருவருக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

NAT-Fire-in-electric-room-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap