நேற்று, ஷார்ஜா – கோர் ஃபக்கான் சாலையில் முன்னால் சென்ற வாகனத்தின்மீது மோதிய ட்ரக், கட்டுபாட்டை இழந்ததால் சாலையில் தடம்புரண்டது. இந்த விபத்தில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா காவல்துறையின் ரோந்துப் பிரிவு, ஆம்புலன்ஸ், சிவில் பாதுகாப்புப் பிரிவு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தோருக்கு உதவினர். அதன்பின்னர் அவர்கள் கோர் ஃபக்கான் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
ஷார்ஜா காவல்துறையின் துரித நடவடிக்கையால் அந்த சாலையில் போக்குவரத்து சில மணிநேரங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
வாகனவோட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்றவேண்டும் எனவும் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குதல் கூடாது எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.