UAE Tamil Web

ஷார்ஜா: தேசிய தினத்திற்காக அறிவிக்கப்பட்ட 50% போக்குவரத்து அபராத தள்ளுபடியை பெறுவது எப்படி.?

traffic

அண்மையில் அமீரகத்தில் 49-வது தேசிய தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பல எமிரேட்டுகளில் தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அபாரதங்கள் மீது 50% தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டது.

- Advertisment -

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு அதற்காக அபராதம் பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் வகையிலான இந்த திட்டம் ஷார்ஜாவிலும் அறிவிக்கப்பட்டது. ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் தவிர மற்ற போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அளிக்கப்படும்.

டிசம்பர் 2-ம் தேதி துவங்கிய இந்த திட்டம் 49 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் செயலி(app) அல்லது ஷார்ஜாவில் உள்ள Sahl சாதனங்கள்(Sahl devices) மூலம், அபராத கட்டணத்தை செலுத்துவதால் வாகன ஓட்டிகள் தங்களது போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி பெறலாம் என்று ஷார்ஜா போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள ஷார்ஜா போலீஸ், ‘இந்த திட்டம் முடிவடைவதற்கு முன் போக்குவரத்து அபராதங்களை செலுத்தி 50% தள்ளுபடியை பெற்று கொள்ளுமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது. ஷார்ஜாவில் பல்வேறு பகுதிகளில் 12 இடங்களில் Sahl சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.