UAE Tamil Web

ஷார்ஜா: 2 வது மாடியில் AC-யைப் பொருத்திக்கொண்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து மரணம்..!

ABU-SHAGARA-SHARJAH

ஷார்ஜாவின் அல் சுயோ 9 பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஷார்ஜா காவல்துறை நேற்று அறிவித்திருக்கிறது.

- Advertisment -

வங்கதேசத்தைச் சேர்ந்த 28 வயதான அந்த இளைஞர் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, இரண்டாம் தளத்தில் உள்ள குடியிருப்பில் AC யைப் பொருத்துவதற்காக மேலே ஏறியிருக்கிறார். பணிபுரிந்துகொண்டிருக்கும் வேளையில் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார் இளைஞர்.

இளைஞரின் கபால எலும்பு உள்பட உடலின் பல்வேறு பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞர் அனுமதிக்கப்பட்டிருந்த அல் காசிமி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இறந்துபோன இளைஞர் விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்திருந்ததாக கட்டிட உரிமையாளர் தெரிவித்தார். விபத்து குறித்து அறிந்தவுடனேயே குற்றவியல் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கட்டுமான நிறுவனங்கள் பணிபுரியும் இடங்களில் மேம்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஷார்ஜா காவல்துறை எச்சரித்துள்ளது.