UAE Tamil Web

ஷார்ஜா: மசூதிகளில் பெண்களுக்கான இடங்களில் இனி ஆண்கள் தொழுகை நடத்தலாம்..!

Sharjah-Mosque

ஷார்ஜாவில் உள்ள பெரிய மசூதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட பெண்களுக்கான தொழுகை இடங்களில் மார்ச் 26 ஆம் தேதிமுதல் ஆண்கள் தொழுகை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மசூதிக்குள் மக்கள் நுழைய அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு அதிகமான நபர்கள் வருகிறார்கள். இதன்காரணமாக பலர் மசூதிக்கு வெளியே உள்ள இடங்களில் தொழுகை நடத்தும் நிலை இருந்துவருகிறது. முக்கியமாக கொரோனா காரணமாக பெண்களுக்கான தொழுகை நடத்தும் இடங்கள் இன்னும் திறக்கப்படாததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் பேசிய ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறையின் தலைவர் அப்துல்லா பின் யாரோஃப் அல் சபோஷி,” சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மசூதிகளில் தொடர்ந்து பின்பற்றப்படும். ஷார்ஜாவில் புதிதாக 40 மசூதிகள் திறக்கப்படும். குறிப்பாக ரமலானுக்கு முன்னதாக 25 மசூதிகள் திறக்கப்பட இருக்கின்றன” என்றார்.

Sharjah-Mosque
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap