UAE Tamil Web

ஷார்ஜா: உங்களது இடத்திற்கே வரும் கொரோனா தடுப்பூசி பேருந்து – புதிய சேவை அறிமுகம்..!

Stock-Sharjah-Skyline--Al-Majaz_

ஷார்ஜாவின் முவேய்லே பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மொபைல் கொரோனா தடுப்பூசி சேவை துவங்கப்பட்டிருக்கிறது.

- Advertisment -

ஷார்ஜா முதன்மை சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர். அமீரா அல் காஜா இதுபற்றிப் பேசுகையில் ஷார்ஜா மெடிக்கல் டிஸ்ட்ரிக்ட் (Sharjah Medical District) காவல்துறை மற்றும் ஷார்ஜா யூனிவெர்சிட்டி ஆகியவை இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இதன்மூலம் ஷார்ஜாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசியானது வழங்கப்பட உள்ளன” எனத் தெரிவித்தார்.

ஷார்ஜாவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதை அதிகரிக்கும் நோக்கில் சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகத்தின் அறிவுரையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

முவேய்லே பகுதியில் மூன்று நாட்களுக்கு இந்தப் பேருந்து இருக்கும் எனவும் அதன்பிறகு அடுத்தவாரத்தில் ஷார்ஜாவின் மற்ற பகுதிகளுக்கு பேருந்து செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முவேய்லே பகுதியில் வசிப்பவர்கள் மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையில் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஷார்ஜா காவல் பணித்துறையின் ஒத்துழைப்பு சேவைப்பிரிவு இயக்குனர் மேஜர் அப்துல் ரஹ்மான் முகமது போகணிம் பேசுகையில், இந்த மொபைல் சேவையில் கொரோனா PCR பரிசோதனை மற்றும் தடுப்பூசி ஆகிய இரு சேவைகளும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.