fbpx
UAE Tamil Web

ஷார்ஜா: கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்துச்செல்லப்படும் வீடியோ..!

Wadi-Shais_

ஷார்ஜா: கனமழை காரணமாக கோர் ஃபக்கான் அருகேயுள்ள வாதி ஷைஸ் (Wadi Shais) பகுதியில் நேற்று திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இதில் மூன்று SUV கார்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக இதிலிருந்த நான்கு இளைஞர்கள் தண்ணீர் பெருக்கெடுப்பதை உணர்ந்தவுடனேயே காரில் இருந்து வெளியேறிவிட்டனர்.

திடீர் வெள்ளத்தில் கார்கள் சிக்குண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

கார்களுக்குள் தண்ணீர் நுழைவதை அறிந்த இளைஞர்கள், ஜன்னல் வழியாக காரைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

“நாங்கள் அதிலிருந்து வெளியே வந்த பின்னரும் நீரின் சக்தியினால் நங்கள் அடித்துச்செல்லப்பட்டோம். நல்லவேளையாக ஷார்ஜா காவல்துறை எங்களையும் எங்களது கார்களையும் அதிலிருந்து மீட்டது. அவர்களுக்கு நன்றி” என இந்நான்கு இளைஞர்களில் ஒருவரான கலீஃபா அல் தஹ்மானி (Khalifa Al Dahmani) தெரிவித்தார்.