UAE Tamil Web

ஷார்ஜாவில் திறக்கப்பட்ட அழகிய மசூதி: ஒரே நேரத்தில் 500 பேர் தொழுகை நடத்தலாம்..!

New mosque opens in Sharjah

ஷார்ஜா: அல் தைத் சாலை அருகே, அல் அதைன் பகுதியில் புதிய மசூதி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 65 பெண்கள் உட்பட 515 பேர் இங்கு ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம்.

- Advertisment -

இஸ்லாமிய கட்டிடக்கலையும் நவீன கட்டமைப்பும் இந்த மசூதியின் கட்டுமானத்தில் மிளிர்கிறது. ஐந்து குவி மாடங்களும் 21 மீட்டர் உயரமுள்ள மினாரத்தும் இந்த மசூதியினை மேலும் கம்பீரமாகக் காட்டுகின்றன.

உச்ச சபையின் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர். சுல்தான் பின் முகமது அல் காசிமி (Sultan bin Muhammad Al Qasimi) அவர்களுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த மசூதி திறக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறை தெரிவித்திருக்கிறது.

நம்பிக்கையின் விதையை குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் விதைத்து மகிழ்ச்சியை பெருக்குவதே ஷார்ஜா ஆட்சியாளரின் நோக்கம் என ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.