கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டுத்துறை புதிய கட்டுப்பாடுகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஷாப்பிங் செண்டர்கள் மற்றும் மால்கள் தங்களது மொத்த கொள்ளளவில் 60 சதவீத மக்களுடன் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அரங்குகளில் 50 சதவீத மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
உணவகங்களில் இரு டேபிள்களுக்கு இடையே குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளி விடவேண்டும், ஒரே குடும்பத்தைச் சேராத நபர்களாக இருக்குமானால் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே ஒரு டேபிளில் அமரலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, முகக்கவசம் அணிதல் போன்ற பிற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கவனமுடன் பின்பற்றவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.