ஷார்ஜா: ஜனவரி 1, 2021 ஆம் தேதி ஷார்ஜாவின் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களது வாகனங்களை இலவசமாக பொது பார்க்கிங் இடங்களில் நிறுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒரு நாள் முழுவதும் (ஜனவரி 1) இலவச பார்க்கிங் திட்டம் நடைமுறையில் இருக்கும் என ஷார்ஜா நகராட்சி அறிவித்திருக்கிறது.
நீல நிற பதாகைகள் (கட்டண பார்க்கிங் இடங்கள்) வைக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர்த்து பிற பொது பார்க்கிங் இடங்களில் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் என நகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#الشارقة #بلدية_مدينة_الشارقة #المواقف_العامة #sharjah #shjmunicipality pic.twitter.com/UDuwUaEEpS
— بلدية مدينة الشارقة (@ShjMunicipality) December 30, 2020