UAE Tamil Web

ஷார்ஜா: பிறந்து ஒருமாதமே ஆன இந்தியக் குழந்தை மரணம்: தாய்ப்பால் ஊட்டும்போது நிகழ்ந்த சோகம்..!

Sharjah-Police_

ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் வசித்துவரும் இந்திய தம்பதியின் ஒரு மாத குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மரணமடைந்ததாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

இதுகுறித்து குழந்தையின் தாயிடம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குழந்தைக்கு பாலூட்டி, மெத்தையில் படுக்க வைத்ததாகவும் சிறிதுநேரத்தில் குழந்தை சலனமற்று இருப்பதை அறிந்து ஆம்புலன்ஸிற்கு போன் செய்ததாகவும் தாய் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மருத்துவ உதவியாளர் குழு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். இருப்பினும் வருகையின் போதே குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குழந்தையின் வாயில் பால் வழிந்திருப்பதாக காவல்துறையின் முதன்மை அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது. ஆகவே, தாய்ப்பால் குழந்தையின் மூச்சுக்குழலில் இறங்கியதால் மூச்சுத் திணறி இந்த துர் நிகழ்வு நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த இந்த பச்சிளங்குழந்தையின் மரணம், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.