UAE Tamil Web

குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட பேச்சுலர்கள் வெளியேற்றம்.! ஷார்ஜா நகராட்சி தகவல்

sharja

நகராட்சி அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனைகளின் விளைவால் ஷார்ஜாவில் குடும்பங்கள் மட்டுமே உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 6,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisment -

ஷார்ஜா போலீஸ் மற்றும் ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்துடன் இணைந்து குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் நகராட்சி, இதுவரை மொத்தம் 1,636 சோதனைகளை நடத்தியுள்ளது. ஷார்ஜாவிலிருந்து எதற்காக பேச்சுலர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

ஷார்ஜா நகராட்சியின் பொது இயக்குனரான தபிட் அல் துராஃபி கூறுகையில், ‘குறைந்தது 6,561 பேச்சுலர்கள் குடும்பங்கள் மட்டுமே இருக்கும் சுற்றுப்புறங்களில் வசித்து வந்தனர். விதிகளை மீறி தங்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

சமீபத்திய ஆய்வுகளின் போது அங்கீகரிக்கப்படாத பகிர்வுகள் மற்றும் சட்டவிரோத மின் இணைப்புகளை கண்டுபிடித்ததாக கூறியது. அவ்வீடுகளின் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் ஷார்ஜா நகராட்சி கூறியது. சிலர் தங்கள் வீட்டில் கார் பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் உணவுக் கடைகளை அமைத்திருப்பது உட்பட மேலும் பல மீறல்கள் ஆய்வின் போது கண்டறியப்பட்டதாக அல் துராஃபி கூறியுள்ளார்.

மேலும் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்கள் தங்கி இருப்பது பற்றி புகாரளிக்க பொதுமக்கள் ஷார்ஜா நகராட்சியை அதன் ஹாட்லைன் எண் 993-ல் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.