39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

கொரோனாவால் வரலாறு காணாத அளவு அதிகரித்த மின் கட்டணம்.! அமீரக குடும்பங்கள் அதிர்ச்சி

eb

கோவிட்-19 தொற்று காலகட்டத்தில் தங்களது வீடுகளின் மின் கட்டணங்கள் திடீரென பல மடங்கு அதிகரித்ததால் அமீரக குடும்பங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கத்தால் கடைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் என அனைத்துமே இயல்பாக செயல்பட முடியாமல் போனது. எனவே வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஒர்க் ஃப்ரம் ஹோம்(work from home) முறையும், வளாக கற்றல் இல்லாமல் மின்கற்றல் (E learning) முறையும் வீடுகளில் சர்வசாதாரணமாகி போனது, மின் கட்டணங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாகியுள்ளது.

இதுவரை இல்லாத அளவு..

இதற்கு உதாரணமாக ஷார்ஜாவில் 3 பெட்ரூம்களை கொண்ட குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பம், அவர்களின் மாதாந்திர மின் கட்டணம் இதுவரை இல்லாத அளவு அதிகரித்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. இது பற்றி கூறியுள்ள குடும்ப தலைவவரும், ரியல் எஸ்டேட் மேனேஜராக வேலை பார்க்கும் ஷிஹாபுதீன், எனக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். கொரோனா காரணமாக இவர்களில் இருவர் தொலைதூர கல்வி(மின்கற்றல்) திட்டத்தை தேர்வு செய்தனர். என் மனைவி ஒரு இல்லத்தரசி. எங்களது வீட்டின் ஜூலை மாததிற்கான மின்சார கட்டணமாக 3,600 திர்ஹம்ஸ் பில் வந்தது. இதற்கு முன் இவ்வளவு அதிக மின் கட்டணம் தங்களுக்கு வந்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் ஷிஹாபுதீன்.

மேலும் பேசிய அவர் கடந்த ஆண்டு இதே கோடை காலத்தில் 2,200 திர்ஹம்ஸ் மட்டுமே மின் கட்டணம் செலுத்தியதாகவும், ஒருவேளை மின் பயன்பாடு அளவீட்டில் தவறு நிகழ்ந்திருக்குமோ என்று நினைத்து, அருகில் வசிப்போரிடம் இது குறித்து கேட்ட போது வீட்டிலிருந்தே பள்ளி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்பதாலும், பெரியவர்கள் அலுவலக வேலைகளில் ஈடுபட்டுள்ளதாலும் ஏராளமானோருக்கு மின் கட்டணங்கள் உயர்ந்துள்ளதை தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் ஷிஹாபுதீன்.

மின் கட்டணத்தை உயர வைக்கும் ஏசி..

வீட்டில் ஏசி வசதி செய்து கொண்டுள்ள குடும்பத்தினரே அதிக மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஷார்ஜாவின் முவைலாவில்(Muwaeilah) வசிக்கும் இந்திய வெளிநாட்டவர் விவேக் என்பவர் கூறுகையில், 3 பெட்ரூம்களை கொண்ட வீட்டில் தானும் தன் சகோதரரும் மட்டுமே வசிப்பதாகவும், ஆனாலும் தங்கள்து மாதாந்திர மின் கட்டணம் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கு காரணம் நாங்கள் வீட்டிலேயே இருப்பதால் 24 மணி நேரமும் ஏசி-யை பயன்படுத்துவதே என்றும், தற்போதய லீஸ் முடிந்ததும் அடுத்த வருடம் ஏசி இல்லாத வீட்டிற்கு குடியேற திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டணத்தில் தள்ளுபடி..

மேலும் தொற்று காலத்தில் சிரமப்படும் அனைவருக்காகவும் 10 சதவீத மின் கட்டண குறைப்பு சலுகையை ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் வழங்கியுள்ளதால், தனது மின் கட்டணத்தில் சுமார் 3,600 திர்ஹம்ஸ் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் விவேக் கூறியுள்ளார். இதனிடேயே ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, குடியிருப்பாளர்களின் மின்சாரம் மற்றும் நீர் நுகர்வு 70% வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!