UAE Tamil Web

“5 மணிநேரம் மட்டுமே ஸ்கூல்; மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதைக் குறையுங்கள்” – பள்ளிகளுக்கு ஷார்ஜா அரசு உத்தரவு..!

Sharjah-private-schools-

ரமலானை முன்னிட்டு ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் நாள்தோறும் 3 முதல் 5 மணிநேரங்கள் மட்டுமே இயங்கவேண்டும் என ஷார்ஜா தனியார் பள்ளிகளுக்கான கல்வி ஆணையம் (SPEA) நேற்று தெரிவித்துள்ளது.

காலை 9 மணிக்குள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் வேலைநேரமானது 3 மணிநேரத்திற்கு குறைவாகவோ, 5 மணிநேரத்திற்கு அதிகமாகவோ இருத்தல் கூடாது என SPEA தெரிவித்துள்ளது. இந்த குறைக்கப்பட்ட வேலை நேரத்திற்குள் பணிகளை முடிக்கும் வகையில் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் அளிப்பது குறைக்கப்பட வேண்டும். போலவே ப்ராஜக்ட் மற்றும் டெஸ்டுகள் குறைவான அளவில் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் பிறை தென்படுவதைப் பொறுத்து 12 அல்லது 13 ஆம் தேதிகளில் ரமலான் கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அபுதாபியிலும் ரமலான் மாதத்தில் பள்ளிகள் இயங்கும் நேரம் 4 மணிநேரமாக குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

Sharjah-private-schools-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap