UAE Tamil Web

ஷார்ஜா: அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஸ்கேனிங் வாகனங்கள் அறிமுகம்.. இதன் வேலை என்ன, எப்படி செயல்படுகிறது.?

sharjah

ஷார்ஜா நகராட்சி டிஜிட்டல் ஸ்கேனிங் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொது வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் விதிமீறல்களைக் கண்காணிக்கும் பணிக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

பொது பார்க்கிங் மண்டலங்களில் மேம்பட்ட ஆய்வு முறையை அறிமுகப்படுத்துவதற்கான முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இரு ஸ்கேனிங் வாகனங்கள்(scanning vehicles) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆய்வு வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் 3,000 வாகனங்களை ஸ்கேன் செய்யலாம் என்று ஷார்ஜா நகராட்சியின் நிர்வாக இயக்குனர் தபிட் அல் தராஃபி கூறியுள்ளார்.

இந்த வாகனங்களில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது வாகனத் தகடுகளை ஸ்கேன் செய்வதற்கும் அனைத்து மீறல்களையும் துல்லியமாக கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. இதனால் ஆய்வாளர்களுக்கான நேரத்தை, முயற்சியை மிச்சப்படுத்த உதவும்.

இந்த ஸ்கேனிங் வாகனங்கள் தொடுதிரை கட்டண சாதனங்கள்(touchscreen devices) செயல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிக்கும். மேலும் வாகன பிளேட்டுகள்(vehicle plates )மற்றும் மின்னணு டிக்கெட்டுகள், நீண்ட கால சந்தாக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் உரிமையாளர்கள் செலுத்தியுள்ள கட்டணங்களின் தரவுகளை ரீட்(Read) செய்யும். கட்டணம் செலுத்தாமல் பொது வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த, 10 நிமிட கருணை கால அவகாசத்தை(grace period) இந்த வாகனங்கள் வழங்கும் என்று ஷார்ஜா நகராட்சி பொது பார்க்கிங் துறை இயக்குநர் அலி அகமது அபு காசின் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் ஸ்கேனிங் வாகனத்தின் செயல்பாடுகள்..

  • டிஜிட்டல் ஸ்கேனிங் வாகனங்களில் உள்ள ஸ்மார்ட் கேமராக்கள் கட்டணம் செலுத்தும் சாதனங்களின் தொடுதிரைகள் மூலம், உள்ளிடப்பட்ட கார் எண்களை அடையாளம் காண முடியும்
  • ஒரு வாகனம் குறிப்பிட்ட நேர வரம்பை(specified time limit) தாண்டி விட்டதா அல்லது பார்க்கிங் கட்டணத்தை செலுத்தவில்லையா என்பதை ஸ்கேனிங் வாகனத்தில் உள்ள ஸ்மார்ட் செயலி சரிபார்க்கும்.
  • இது பார்க்கிங் நேரத்தை தாண்டிய அல்லது பார்க்கிங் கட்டணத்தை செலுத்தாத வாகனத்தின் புகைப்படத்தை எடுத்து பார்க்கிங் துறையின் தரவுத்தளத்தில் அப்டேட் செய்துவிடும்.
  • வாகனத்தின் சரியான இருப்பிடத்தையும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய வாகனத்தின் படத்தையும் கொண்டு ஆய்வாளர்கள் அலர்ட் செய்யப்படுவார்கள்.