fbpx
UAE Tamil Web

ஷார்ஜா: விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது..!

shj-airprot-vaccine-

கொரோனாவிற்கு எதிரான அமீரகத்தின் போராட்டத்தில் அரசின் கரத்தை வலுப்படுத்தும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்த அமீரக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதன் ஒரு பகுதியாக ஷார்ஜா சர்வதேச விமான நிலைய முன்னணி அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் (MoHAP) நேற்று தெரிவித்திருக்கிறது.

ஷார்ஜா அரசின் நடவடிக்கையின் முயற்சியின் மூலமாக இந்த மருந்தானது விமான நிலைய முன்னணி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

“அமீரகத்தில் மூன்றாம்கட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த கொரோனா தடுப்பூசி, MoHAP அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சரியான குழுக்களை அடையாளம் காணுதல், நோய் எதிர்ப்பு சக்தியினை கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் ஆதாரம் சார்ந்த அறிவியல் விதிகளின்படி தடுப்பூசி வழங்கப்படுகிறது. தர நிர்ணய வழிமுறைகள், சர்வதேச ஒழுங்குமுறை நெறிமுறைகள், தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பு மற்றும் பக்க விளைவுகள் குறித்த ஆய்வு ஆகியவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என ஷார்ஜா மருத்துவ மாவட்டத்தின் இயக்குனர் முகமது அல் சரூனி (Mohammed Al Zarouni) தெரிவித்தார்.

முன்னணி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது மருந்தின் செயல்திறன் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திருப்பதாக சரூனி தெரிவித்தார்.