UAE Tamil Web

ஷார்ஜா : கார் பரிசோதனைக்கு ட்ரைவ் த்ரூ மையம் திறப்பு – 2 நிமிடங்களில் ரிசல்ட்..!

Sharjah drive-thru car testing centre

ஷார்ஜாவின் தஸ்ஜீல் ஆட்டோ வில்லேஜ், ஷார்ஜா காவல்துறையுடன் இணைந்து ட்ரைவ் த்ரூ வாகன பரிசோதனை சேவையை அளிக்க இருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

காரின் நம்பர் பிளேட்டை சரிபார்த்தல், மைலேஜ், லைட்ஸ், டயர் மற்றும் பெயின்ட் ஆகியவை இங்கே பரிசோதிக்கப்படும்.

இந்தப் புதிய சேவையின் மூலமாக காருக்குள் இருந்தபடியே உங்களுக்கான பரிசோதனை முடிவுகளை இரண்டு நிமிடத்தில் பெறலாம். மையத்தின் வெளியேறும் பகுதியில் உங்களது காரின் பரிசோதனை முடிவுகள் உங்களிடம் அளிக்கப்படும்.

Enoc குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சைஃப் ஹுமைத் அல் ஃபலாசி (Saif Humaid Al Falasi) இதுகுறித்துப் பேசுகையில்,” இந்த கொரோனா சூழல் பல நிறுவனங்களை எப்படி இயங்குவது என யோசிக்க வைத்திருக்கிறது. ஆனால் நாங்கள் இதனை ஓர் வாய்ப்பாக பார்க்கிறோம். இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.

இந்த சேவையைப் பெற வாகனமானது 2015 அல்லது அதற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்டதாக இருத்தல் அவசியம். இந்த ட்ரைவ் த்ரூ மையம் சனி முதல் வியாழன் வரையிலான நாட்களில் காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரையில் திறந்திருக்கும்.

மூன்று மாதங்களுக்கு மக்கள் இந்த சேவைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.