UAE Tamil Web

30 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் ஷார்ஜாவில் கட்டி முடிக்கப்பட்ட 4 புதிய சந்தைகள்..

sharjah

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய பிராந்தியத்தில் 4 சந்தைகளை 30 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் ஷார்ஜா பொதுப்பணித் துறை கட்டி முடித்துள்ளது. இதில் வெள்ளிக்கிழமை சந்தை, கால்நடை சந்தை, மீன் சந்தை, மற்றும் ஒரு தீவன சந்தை ஆகியன அடங்கும்.

- Advertisment -

சந்தைகள் நிறைவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ திறப்பிற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, ஷார்ஜா பொதுப்பணித் துறை தலைவர் அலி பின் ஷாஹீன் அல் சுவைதி தகவல் தெரிவித்துள்ளார்.மேற்கண்ட 4 சந்தைகள் பற்றிஅதிகாரிகள் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள்ளனர்.

வெள்ளிக்கிழமை சந்தை..

உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு அதற்கேற்ப வெள்ளிக்கிழமை சந்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஷார்ஜாவின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் ஒருங்கிணைந்த பகுதி. அல் படாய் நகராட்சிக்கு அடுத்ததாக ஒரு முக்கிய பகுதியில் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தை அல் படாயில் வசிப்பவர்களுக்கும், ஷார்ஜா அல் தைத் சாலையின் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்போருக்கும் பயனளிக்கும்.

இது குடியிருப்பாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. சந்தையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கமர்ஷியல் கடைகளும் உள்ளன. 13,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சந்தையில் 15 கடைகள் மற்றும் 40 கார் ஸ்பேஸ் பகுதிகளும் உள்ளன. இந்த சந்தை பிற எமிரேட்டுகளில் இருந்து வரும் குடிமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனுள்ள ஒரு இடமாக இருக்கும்.

கால்நடை சந்தை..

ஷார்ஜா பொதுப்பணித் துறை திட்ட இயக்குநர் முகமது பின் யாரூஃப் பேசும் போது, அல் படாய் பகுதியில் கால்நடைகளுக்கு (மற்றும் ஒட்டகங்களுக்கு) 17 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில், 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் சந்தையை தங்கள் துறை கட்டி முடித்துள்ளதாக கூறியுள்ளார். ஷார்ஜாவின் தைத் சாலையில் ஒரு முக்கியமான இடத்தில் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான கால்நடைகளை வைத்து கொள்ள வசதியாக சந்தையில் 23-க்கும் மேற்பட்ட வேலி அடைக்கப்பட்ட இடங்கள் உள்ளன. ஒவ்வொரு வேலி அடைப்பும் 57 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது. சந்தையின் ஒட்டக பிரிவை பொறுத்த வரை 21 பெரிய களஞ்சியங்கள் உள்ளன. களஞ்சியங்கள் ஒவ்வொன்றும் 90 சதுர மீட்டர், திறந்த முன் புறம் மற்றும் வேலி மூலம் பிரிக்கப்பட்டுள்ளன.

இறைச்சியைக் கொல்வதற்கும், வெட்டுவதற்கும், பேக்கிங் செய்வதற்கும் சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டுள்ள அதிநவீன மேம்பட்ட இறைச்சிக் கூடம் இந்த சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தீவன சந்தை..

தீவன சந்தையில் விற்பனைக்கு என்றே 2 பெரிய கட்டிடங்கள் உள்ளன. 41 சதுர மீட்டர் பரப்பளவுடன் கூடிய தலா 10 கடைகள் 2 கட்டிடங்களிலும் உள்ளன. ஏலத்திற்காக 4 நிழல் பகுதிகள் உள்ளன. சந்தையில் பறவைகளை விற்பனை செய்வதற்கான கட்டிடமும் உள்ளது. இந்த கட்டிடத்தில் 27 சதுர மீட்டரில் தலா எட்டு கடைகள் உள்ளன. சந்தை 846 மீட்டர் நீளமுள்ள கம்பிச் சட்டம் கொண்ட சுவரால் சூழப்பட்டுள்ளது.

மீன் சந்தை..

810 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு கட்டிடத்துடன் அல் படாயில் மீன்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையும் மீன்களை சுத்தம் செய்வதற்கும் வெட்டுவதற்கும் ஏற்ற வசதியுடன் 35 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.