UAE Tamil Web

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி.. 11 நாட்கள், 30-க்கும் மேற்பட்ட மொழிகள், 80,000-க்கும் மேற்பட்ட புதிய தலைப்புகள்..

book

நவம்பர் 4-ம் தேதி துவங்க உள்ள 39-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியானது இலக்கிய மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் கொண்டாட்டமாக இருக்கும்.

- Advertisment -

உலகிலேயே மிகப் பெரிய மூன்று புத்தக கண்காட்சிகளில் ஒன்றாக திகழும், ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி(SIBF),வரும் நவம்பர் 4 -ம் தேதி முதல் 14 வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 73 நாடுகளில் இருந்து 1,024 வெளியீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

அமீரகத்திலிருந்து 186, எகிப்திலிருந்து 202, லெபனானிலிருந்து 93, சிரியாவிலிருந்து 72, சவூதி அரேபியாவிலிருந்து 46, இங்கிலாந்திலிருந்து 39, அமெரிக்காவிலிருந்து 29, இத்தாலியிலிருந்து 13, பிரான்சிலிருந்து 12, கனடாவிலிருந்து 8 வெளியீட்டாளர்கள் உட்பட இன்னும் ஏராளமான நாடுகளை சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

அதுமட்டுமின்றி ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் 80,000-க்கும் மேற்பட்ட புதிய தலைப்புகள் இடம்பெற உள்ளது. “ஷார்ஜாவிலிருந்து உலக வாசிப்புகள்‘ (The World Reads from Sharjah) என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த 11 நாள் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

ஷார்ஜா புத்தக ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த உலக புகழ்பெற்ற புத்தக கண்காட்சி எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவில் நடக்கிறது. கொரோனா காரணமாக அனைத்து கலாச்சார நிகழ்வுகளும் ஆன்லைனில் ‘ஷார்ஜா ரீட்ஸ்’(Sharjah Reads) வழியே நடைபெறும். எனினும் புத்தகங்கள் நேரில் காட்சிக்கு வைக்கப்படும்.

இந்த சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிட ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு அனுமதி என்பது குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தொற்றுநோயின் தற்போதைய சவாலுக்கு மத்தியில் ஏராளமான வெளியீட்டு நிறுவனங்களின் பங்கேற்பு, புத்தகத் துறையை புத்துயிர் பெற செய்வதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவதில் SIBF-ன் ஒருங்கிணைந்த பங்கிற்கு ஒரு சான்றாக உள்ளது.

புத்தகங்களை வாங்க ஷார்ஜா எக்ஸ்போ சென்டரை பார்வையிட விரும்பும் குடியிருப்பாளர்கள் registration.sibf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.