UAE Tamil Web

ஷார்ஜா: இன்று இரவு இருளில் மூழ்க இருக்கும் மசூதிகள் – காரணம் என்ன?

sharjah Mosque

ஷார்ஜாவின் மசூதிகள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களில் உள்ள விளக்குகள் இன்று இரவு 8.30 மணிமுதல் 9.30 வரையில் அணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எர்த் ஹவர் எனப்படும் திட்டத்தின் அடிப்படையில் இந்த நடைமுறையானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை இரவு பின்பற்றப்பட்டு வருகிறது. உலகமெங்கிலும் உள்ள 140 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள குடியிருப்பாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்து இன்று இரவு விளக்குகளை அணைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கான உலக நிதியம் (World Wide Fund for Nature) கடந்த 2007 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த முயற்சியை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மேற்கொண்டது. நமது புவிக் கிரகத்தை வளப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை இந்த அமைப்பு மேற்கொண்டுவருகிறது.