UAE Tamil Web

உணவுகளில் பன்றி இறைச்சி தடயங்களை கண்டறியும் புதுமை முறை.! தனது நவீன முயற்சிக்கு அறிவுசார் சொத்துரிமை(IPR) பெற்ற ஷார்ஜா நகராட்சி பெண் ஊழியர்..

sharjah

ஷார்ஜா நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் உணவுகளில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டிருப்பதை கண்டறியும் தனது ஒரு புதுமையான முறைக்காக, அறிவுசார் சொத்துரிமையை (IPR- intellectual property rights) பெற்றுள்ளார்.

- Advertisment -

ஷார்ஜா நகர நகராட்சியின் உணவு ஆய்வகத்தின் நுண்ணுயிர் பகுப்பாய்வாளரான அஸ்மா முகமது அல் ஷைபானி என்ற பெண் ஊழியர், உணவுகளில் கலக்கப்படும் பன்றி இறைச்சியின் தடயங்களை துல்லியமாக கண்டறிவதற்கான மூலக்கூறு நுட்பங்களை மேம்படுத்தும் தனது புதுமையான திட்டத்திற்காக IPR-ஐ பெற்றுள்ளார். இவர் இதற்கு முன் மேற்கண்ட தனது திட்டத்திற்காக ஷார்ஜா கண்டுபிடிப்பு விருதில்(Sharjah Innovation Award), முதல் இடத்தை பெற்றவர் ஆவார்.

உணவில் பன்றி இறைச்சி தடயங்களை கண்டறியும் ஷைபானியின் இந்த நவீன திட்டம் உலகில் இதுவரை யாரும் கண்டறியாதது. இது சுகாதார மற்றும் உணவுத் துறைக்கு மிகவும் பயனளிக்கும் மற்றும் ஆய்வக சோதனைத் துறையில் புதியதொரு மைல் கல்லாகும்.

ரியல் டைம் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் டெக்னாலஜியை(real-time Polymerase Chain Reaction technology) பயன்படுத்தி, உணவு பதப்படுத்துதலில் பன்றி இறைச்சி தடயங்களைக் கண்டறிய துல்லியமான பரிசோதனை முறைகளை உருவாக்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

சுகாதார அளவீடுகள் மற்றும் மதம் சார்ந்த கருத்துகளை மனதில் வைத்து, உணவின் தோற்றம் மற்றும் கலவையை தீர்மானிக்க மதிப்பீட்டு கருவிகள் அவசியமானவை என்று அல் ஷைபானி குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசியுள்ள ஷைபானி, தான் கண்டறிந்துள உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது என்றார்.

தனது ப்ராஜெக்ட் மூலம் ஜெலட்டின் கொண்ட உணவுகளில் பன்றி இறைச்சி தடயங்களைக் கண்டறிய, உணவுத் துகள்களில் உள்ள ஆர்.என்.ஏ பகுப்பாய்வின் அடிப்படையில் அளவு மற்றும் தரமான மூலக்கூறு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஷார்ஜா நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் தபிட் அல் துராஃபி பேசும் போது, புதுமையான யோசனைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் முயற்சியில் நகராட்சி தங்களது ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதில் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பொது சுகாதாரத் துறை மற்றும் மத்திய ஆய்வகங்களின் உதவி இயக்குநர் ஜெனரல் ஷேகா ஷாஸா அல் முல்லா, ஷார்ஜா நகராட்சியின் ஆய்வகங்கள் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்கு ஒரு உகந்த ஊக்கமான சூழலை வழங்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.