UAE Tamil Web

5 நாள் விடுமுறையில் ஷார்ஜா காவல்துறைக்கு வந்த போன்கால்கள் எவ்வளவு தெரியுமா? –

Sharjah Police

அமீரக தேசிய தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நாட்களில் ஷார்ஜாவின் காவல்துறை செயல்பாட்டு அறை மொத்தம் 20,282 போன்கால்களுக்கு பதில் அளித்திருக்கிறது.

- Advertisment -

செயல்பாட்டுத்துறையின் தலைமை இயக்குனர் கர்னல் ஜாஸிம் பின் ஹதா அல் சுவைதி (Jassim bin Hada Al Suwaidi) இதுகுறித்துப் பேசுகையில்,”அவசர அழைப்பிற்கான எண்ணான 999 என்ற இணைப்பில் 17,293 போன் கால்களும் அவசரமில்லாத அழைப்பு எண்ணான 901 க்கு மீதியுள்ள கால்களும் வந்திருக்கின்றன” என்றார்.

மேலும், 5 நாள் பொது விடுமுறைக் காலத்தில் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை என செயல்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது. பதிவான விபத்துகளும் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியது மற்றும் போதிய இடைவெளியில் வாகனங்களை இயக்காதது ஆகியவற்றினால் நடைபெற்றிருக்கின்றன.

போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறையின் தலைமை இயக்குனரான லெப்டினன்ட் கர்னல் முகமது அலி அல் நக்பி (Mohammad Ali Al Naqbi) இதுகுறித்துப் பேசுகையில்,” போக்குவரத்து பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருமடங்கு எடுக்கப்பட்டன. சுமூகமான போக்குவரத்தை உறுதிசெய்ய கூடுதல் ரோந்துப் படையினர் நியமிக்கப்பட்டார்கள்” எனக் குறிப்பிட்டார்.