UAE Tamil Web

வீடு திரும்ப வழி தெரியாமல் கோர் ஃபக்கான் மலைப்பகுதியில் தவித்த சிறுவர்கள்..!

Sharjah Police

ஷார்ஜா: கோர் ஃபக்கான் பகுதியில் கடற்கரையை ஒட்டிய மலைப்பகுதிகளில் வீடு திரும்ப வழி தெரியாமல் சிக்கிக்கொண்ட 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களை காவல்துறை பத்திரமாக மீட்டிருக்கிறது.

- Advertisment -

கோர் ஃபக்கான் பகுதியில் வசித்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த இந்த இரு சிறுவர்களையும் நெடுநேரம் காணாததால் காவல்துறை செயல்பாட்டு அறைக்கு சிறுவர்களின் குடும்பம் புகாரளித்திருக்கிறது.

இதனையடுத்து களத்தில் இறங்கிய மீட்புக்குழு, வீடு திரும்ப வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த இரு சிறுவர்களையும் மீட்டது. இரண்டு சிறுவர்களுக்கும் உணவு, நீர் போன்றவற்றை மீட்புக்குழு வழங்கியிருக்கிறது.

சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்டுத்தந்த ஷார்ஜா காவல்துறையினருக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக சிறுவர்களின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.