UAE Tamil Web

(தெரிந்து கொள்ளுங்கள்) ஷார்ஜா: போலீஸாக நடித்து ஏமாற்றுவோர் குறி வைப்பது யாரை.? போலி போலீஸை கண்டுபிடிப்பது எப்படி.!

sharjah

போலீஸ் அதிகாரிகள் போல நடித்து ஏமாற்றும் மோசடி பேர்வழிகளிடமிருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் நோக்கத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஷார்ஜா போலீஸ் துவக்கியுள்ளது. இந்த ஆண்டு போலீஸ் அதிகாரிகளாக நடித்து ஏமாற்றிய பலர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “மோசடிக்கு பலியாகும் முன் நீங்கள் கவனமாக இருங்கள்” என்ற பெயரில் இந்த பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகளாக நடித்து சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியர்கள். அவர்கள் பணம், மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடிக்க தங்களை போலீஸ்காரர்களாக காட்டி கொண்டுள்ளனர். குற்றவியல் மற்றும் புலனாய்வுத் துறையின் இயக்குனர் கர்னல் உமர் சுல்தான் கூறுகையில், போலீஸாக ஆள்மாறாட்டம் செய்பவர்கள் முக்கியமாக ஷார்ஜாவின் தொழில்துறை பகுதிகள் மற்றும் பிற பகுதி மக்களை குறி வைத்து மோசடி செய்து வருகின்றனர்.

விழிப்புணர்வு பிரச்சாரம் எதற்கு.?

தற்போது துவக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் சமூக உறுப்பினர்களுக்கு தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மற்றும் ஒவ்வொரு நபரும் உண்மையான மற்றும் போலி போலீஸ் அதிகாரிகளுக்கு இடையிலான வித்தியாசத்தை எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கற்று தரும். போலீஸாக நடிப்பவரை எதிர் கொண்டால் அவர் போலி என்பதை எப்படி கண்டறிவது, அந்த சமயத்தில் உதவிக்கு யாரை அழைப்பது போன்றவற்றை அனைத்து சமூக உறுப்பினர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என ஷார்ஜா போலீஸ் விரும்புகிறது என்றார்.

ஒரிஜினல் போலீஸ் என்றால்..

உங்களிடம் ஒருவர் தான் ஒருவர் போலீஸ் என்று கூறினால் முதலில் அவர் காவல் அதிகாரி தானா என்பதை உறுதிப்படுத்த தேவையான அடையாளங்களை சரி பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்மையான போலீஸ் அதிகாரிகள் மற்றும் புகைப்படம் அடங்கிய அடையாள அட்டை, கூடவே ஒரு பணியாளர் எண்ணையும் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் அதை கேட்கும் பட்சத்தில் உங்களிடம் அவர்களது அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை காட்டுவார்கள். ஏனென்றால் அது கட்டாயம்.

போலி நபர்களின் குறி..

ஆள்மாறாட்டக்காரர்களின் மோசடிக்கு பலியாகாமல் இருக்க இந்த தகவலை தெரிந்து கொள்வது முக்கியம் என்றார். அது போல காவல்துறை அதிகாரிகளை அவர்களின் சீருடை, பேட்ஜ் மற்றும் போலீஸ் ஐடி மூலம் அறிந்து கொள்ளலாம். காவல்துறையினரால் எடுக்கப்படும் சட்ட நடைமுறைகள் குறித்து போதுமான அறிவு இல்லாதவர்கள் மற்றும் போலீஸ் அடையாள அட்டையை கேட்காதவர்கள் உள்ளிட்ட மக்களை ஏமாற்று பேர்வழிகள் குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். எனவே யாராவது தன்னை போலீஸ் என்று கூறும்போது மக்கள் தவறாமல் அவர்களிடம் தகுந்த ஆதாரங்களை காட்ட சொல்லி கேட்க குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உண்மை அதிகாரிகள் எப்போது, என்ன செய்வர்,!

உண்மையான போலீஸ் அதிகாரிகள் ஒருபோதும் மக்கள் தங்கள் பணப்பையை காட்டவோ அல்லது அவர்களிடம் பணமோ கேட்க மாட்டார்கள். இதுபோன்ற மீறல்களை காணுவோர் இந்த விவகாரத்தை உடனடியாக போலீசில் தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கான சூழலிலோ அல்லது பொது வழக்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றோ தான் ஒரு நபரை சோதிப்பார்கள். அப்போது சந்தேக நபரின் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு அல்லது வேறு சில ஆதாரங்களை ஒரு சில காரணகளுக்காக காவல்துறையினர் கேட்பார்கள்.

சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்..?

ஒரு வேளை காவல்துறையைச் சேர்ந்தவர் எனக் கூறும் நபரின் அடையாளம் உங்களுக்குத் தெரியாவிட்டால், தயங்காமல் 999 அல்லது 80040 என்ற எண், கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். அதே போல 7999 அல்லது ஷார்ஜா போலீஸ் வலைத்தளம் வழியாக டெக்ஸ்ட் செய்யலாம். மேலும் அருகிலுள்ள காவல் நிலையத்தை அடைந்து சம்பவம் பற்றி புகார் அளிக்கலாம்.

அரபு, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் வெளியிடப்பட்ட பிரசுரங்கள் மற்றும் சிறு புத்தகங்கள் மூலம் ஷார்ஜா நகரில் உள்ள உள் மற்றும் பிரதான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கியமாக தொழில்துறை பகுதிகளில் இந்த தகவல்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரி உமர் சுல்தான் தெரிவித்துள்ளார்.

sharjah
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap