UAE Tamil Web

வைரலான வீடியோ.! எமிராட்டி சிறுமியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி வைத்த ஷார்ஜா ஆட்சியாளர்..

sharjah

ஒரு இளம் எமிராட்டி சிறுமியை நேரில் அழைத்து அவரது ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் உச்சசபை உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி.

- Advertisment -

கோர் ஃபக்கனை சேர்ந்தவர் சிறுமி ரயான் அல் ஹோரி. இவர் ஷார்ஜா ஆட்சியாளர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரை எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்பதே இவரது ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை சிறுமி ரயானுக்கு.

எனவே தனிச்சையாகவே தானே பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஷார்ஜா ஆட்சியாளர் மீதான தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார். நகரத்தை மேம்படுத்த ஷார்ஜா ஆட்சியாளர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். எனவே ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தானுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். என்னால் அவரை அணுக முடியாவிட்டாலும் எனது இந்த வீடியோவையாவது அவர் பார்க்க வேண்டும் என்று தான் விரும்புவதாக சிறுமி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் சிறுமியின் வீடியோ வைரலானது. டாக்டர் ஷேக் சுல்தான் அவர்களின் கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றது. இதனை அடுத்து சிறுமியை தனது அரண்மனைக்கு நேரில் வரவழைத்து சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் தனக்கு அருகில் சிறுமி நிற்கும் படங்களை பகிர்ந்து, ஷார்ஜாவின் ஆட்சியாளர் # கோர்ஃபக்கனின் அருமையான குழந்தை ரயான் அல் ஹோரியை பெற்றுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.