UAE Tamil Web

400 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ரஹ்மானியா மால் – ஷார்ஜா ஆட்சியாளர் திறந்துவைத்தார்..!

Sharjah Ruler

ஷார்ஜாவின் அல் ரஹ்மானியா பகுதியில் கட்டப்பட்ட முதல் சமூக மற்றும் பொழுதுபோக்கு மையமான ரஹ்மானியா மால் இன்று ஷார்ஜாவின் ஆட்சியாளரும் உச்ச சபையின் உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர். ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

- Advertisment -

400 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மால் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யவுள்ளது.

இந்த மாலின் பகுதிகள் மற்றும் இங்குள்ள வசதிகளை ஷார்ஜா ஆட்சியாளர் பார்வையிட்டார். இங்கு சில்லறை வர்த்தகக் கடைகள், பொழுதுபோக்கு மற்றும் சேவை மையங்கள், ரெஸ்டாரண்ட் மற்றும் கஃபேக்கள் அமைந்துள்ளன.

ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து 10 நிமிட தூரத்தில் அமைந்துள்ள இந்த மாலில் ஒருங்கிணைந்த சுகாதார மையம், மருந்தகங்கள், சினிமா ஹால்கள், வங்கிகள், வாகன பதிவு மற்றும் பழுதுபார்க்கும் இடங்கள், ஆண் மற்றும் பெண்களுக்கான சலூன், நூலகம் மற்றும் விளையாட்டு அரங்கமும் அமைந்திருக்கின்றன.