UAE Tamil Web

கிஷா, ஷாக்ரஃபா பார்க்குகளுக்கு வருகை புரிந்த ஷார்ஜா ஆட்சியாளர்..!

sharjah ruler

உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர்.ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்கள் ஷார்ஜாவின் அல் ரஹ்மானியா பகுதியில் அமைந்துள்ள கிஷா மற்றும் ஷாக்ரஃபா பூங்காக்களைப் பார்வையிட்டார்.

- Advertisment -

ஷார்ஜா பொதுப்பணித்துறையின் தலைவர் அலி பின் ஷாஹின் அல் சுவைதி அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கல்வி, பொழுதுபோக்கு, சமூக மற்றும் விளையாட்டு சேவைகள் குறித்து ஆட்சியாளரிடம் விளக்கினார்.

கிஷா பூங்காவின் வெளிப்புற விளையாட்டரங்கம், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், ஜாகிங் பாதை, ஸ்கேட்டிங் அரங்கு, சிறுவர்களுக்கான திரையரங்கம் மற்றும் ஏரி உள்ளிட்ட 55 வெளிப்புற இடங்களை ஆட்சியாளர் பார்வையிட்டார்.

அதேபோல, அருகில் அமைந்துள்ள பெண்களுக்கான ஷாக்ரஃபா பூங்காவை ஆட்சியாளர் சுற்றிப்பார்த்தார். விளையாட்டு, திரையரங்கம் என 41 வெளிப்புற அரங்குகளும் 3 விளையாட்டு அரங்கமும் இங்கே இடம்பெற்றுள்ளன.

ஆட்சியாளரின் இந்தப் பயணத்தின்போது ஷார்ஜாவின் தலைமைத் தளபதி சைஃப் அல் ஸாரி அல் ஷம்சி, ஷுரூக்கின் (Shurooq) நிர்வாகத் தலைவர் மார்வன் பின் ஜசீம் அல் சார்கல், அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.